வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

108 ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது! சாதுரியமாகப் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்; இது 58-வது வெற்றி!

108 ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது! சாதுரியமாகப் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்; இது 58-வது வெற்றி!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலிருந்து மதுரைக்கு 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது செல்லும் வழியிலேயே அவருக்குத் திடீரெனப் பிரசவ வலி தீவிரமடைந்தது. இதனால் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் ரோஸி உடனடியாகச் செயல்பட்டு, தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

தொடர்ந்து ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பாகப் பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், புதிதாகப் பிறந்த குழந்தையும் நலமுடன் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவசரமான சூழலிலும் துரிதமாகவும் திறமையாகவும் செயல்பட்டு தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாகக் கையாண்ட மருத்துவ உதவியாளர் ரோஸிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், ரோஸி வெற்றிகரமாகக் கையாண்ட 58-வது பிரசவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.