Sunday special : சுவையான மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள் இன்னொரு முறை சாப்பிட தோன்றும்..!!

சுவையான மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் வீட்டிலேயே அரைத்த மசால்களை பயன்படுத்தி மீன் குழம்பு வைக்கும் பொழுது இன்னொரு வாய் சாப்பிட வாய் துடிக்கும்…

தேவையான பொருட்கள் மீன் முக்கால் கிலோ, சின்ன வெங்காயம் 20, வரமிளகாய் நாலு, தக்காளி மூணு, புளி எலுமிச்சை அளவு வெந்தயம் ரெண்டு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் அரை டேபிள்ஸ்பூன், தனியா தூள் ரெண்டு ஸ்பூன், எண்ணெய் தேவைக்கேற்ப, கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவைக்கு ஏற்ப, தேங்காய் துருவல் ஒரு கப், சுவையான மீன் குழம்பு செய்வதற்கான செய்முறை : மீனைத் தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் தேங்காய் துருவலை அரைத்துக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் சோம்பு கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்து வைத்துக் கொள்ள வேண்டும், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் தக்காளி மற்றும் புளி இரண்டையும் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும், அதனுடன் தனியாத்துள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பின்னர் கரைத்து வைத்த புலியை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும் 20 நிமிடங்கள் குழம்பில் உள்ள பச்சை வாசனைகள் நீங்கிய பின்பு மீன் துண்டுகளை குழம்பில் போட வேண்டும் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும் ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பிறகு குழம்பை மூடி வைக்க வேண்டும் பிறகு சுவையான மீன் குழம்பு ரெடி, மீன் குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் ருசி இன்னும் அதிகமாகும்…!!

Read Previous

சொந்த ஊரை விட்டு.. வெளியூரில் வேலை பார்க்கும் ஆண்களின் சமையலறை எப்படி இருக்கும் தெரியுமா..??

Read Next

ஆட்டுக்கால் பாயா செய்து ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் அடிக்கடி செய்து சாப்பிட தூண்டும் அதன் சுவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular