வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை மெட்டா AI மூலம் சுருக்கி தரும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள், படிக்காமல் இருக்கும் நீண்ட மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும். அதனை சுருக்கமா படித்துக்கொள்ளலாம். இந்த அம்சத்தை, வாட்ஸ்அப் பயனர்கள் கேட்டால் மட்டுமே அதை செய்யும். மேலும், இவ்வாறு சுருக்கி தரும் மெசேஜ்கள், மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது வாட்ஸ்அப் சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.




