பூரான் கடித்தால் உயிர் போய்விடுமா..?? மிகவும் ஆபத்தா..?? உண்மை என்ன என்பதை கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்..!!
பூரான் கடித்தால் உயிர் போய்விடுமா என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் சந்தேகங்களில் ஒன்றுதான். மேலும் பூரான் என்பது கிராமப்புறங்களில் குறிப்பாக வயல்வெளிகள் அதிகமாக தென்படும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் வயல்வெளிகளின் பக்கத்தில் இருப்பதால் பூரான் தேள் போன்றவை நம்மை கடிப்பதற்கு அதிக அளவு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், பூரான் கடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூரான் சிறிய அளவிலான விதித்தன்மை கொண்டது என்றாலும் பூரான்னில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சலங்கை பூரான் என்பது அதிக விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இந்த சலங்கை பூரான் கடித்த இடம் அதிகமாக சிவந்து அதில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும். குறிப்பாக இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள் கூட ஏற்படலாம். இதனால் எந்த விதமான பூரான் கடித்து விட்டாலும் மருத்துவர் நேரடியாக சென்று அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் நல்லது. அதை விட்டுவிட்டு வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள்.




