ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி..!!

Oplus_131072

ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி……

தேவையானவை :

ஜவ்வரிசி _ கால் கப்
சேமியா _ கால் கப்
சர்க்கரை _ அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால் _ அரை கப்
ஏலக்காய் _ ஒன்று

அலங்கரிக்க :

நெய் _ முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி _ 5
திராட்சை _ 5
குங்குமப்பூ _ நான்கைந்து இதழ்கள் (இல்லையென்றாலும் பரவாயில்லை)

செய்முறை :

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும்.

அது நன்றாக‌ வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)

இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்த‌ ஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி & திராட்சையை வறுத்து சேர்க்கவும்.

பாயசத்தைத் தனியாக மட்டுமல்லாமல், உளுந்து வடை அல்லது அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட ஆஹா என்றிருக்கும் !

சூடாக இருக்கும்போது நீர்த்து இருக்கும், ஆற ஆற இறுகி கெட்டியாகும். எனவே கொஞ்சம் நீர்க்க‌ செய்வ‌து நல்லது.

இதனை வெறும் ஜவ்வரிசியை வைத்தோ அல்லது சேமியாவை மட்டுமே வைத்தோகூட செய்யலாம்.

 

Read Previous

வாழ்வின் எதார்த்தம் இதுதான்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Read Next

அனுபவம் பலவிதம்..!! அருமையான சிறுகதை கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular