தவெக அமைச்சர்கள் சிலர் லஞ்சம் மற்றும் கமிஷன் பெறுவதாகவும், இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், பெரிய அளவிலான டெண்டர்களில் 2%, 3%, 4% வரை கமிஷன் கேட்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் என்னென்ன ஆதாரங்கள் உள்ளன, எந்த அமைச்சர்கள் மற்றும் எந்த துறைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக விசாரிக்க முதலமைச்சர் விஜய் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




