தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், பாமகவுக்கு கார் வேண்டாம் என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஆக.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமக எம்எல்ஏக்களுக்கு அரசு கார் வழங்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கார் மற்றும் பராமரிப்புக்காக ஒதுக்கப்படும் நிதியை தொகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அரசு நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாமக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்ற சௌமியா அன்புமணியின் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




