சென்னையில் நேற்று (ஆக.21) நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என சிலர் முயற்சிப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் பழைய சமூக மற்றும் கலாசார நடைமுறைகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அத்தகைய சூழலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில்தான் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
அவர் பயன்படுத்திய சில கடுமையான வார்த்தைகள் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.




