அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், அரசு ஊழியர்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.




