முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

 

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் திருமணம் தொடரும் நிலையில், 2-வது திருமணம் செய்வதால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

பெண்களின் உரிமைகளையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Read Previous

அவைக்குறிப்பில் இருந்து எ.வ.வேலுவின் பேச்சு நீக்கம்: விஜய் புன்னகை!

Read Next

சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular