இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும், இடதுசாரி கட்சிகள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாக பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
தற்போது சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள், தவெக அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த சூழலில், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவு கூட்டணிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இடதுசாரி கட்சிகள் எதிர்காலத்தில் அரசுக்கு வழங்கி வரும் வெளிப்புற ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற அரசியல் விவாதங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், இதுகுறித்து சிபிஐ அல்லது சிபிஎம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.




