தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (36) தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




