எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய நிலைப்பாடு!

 

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசு பணிகளை நேரடியாக மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த அறிவிப்பில் திமுக உறுப்பினர்களுக்கு அரசு கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வசதி குறைந்த மற்றும் சொந்தமாக வாகனம் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உதயநிதியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்களுக்கு அரசு கார் வேண்டாம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கும் முடிவு, சட்டப்பேரவையில் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, அரசு வழங்கும் சலுகையை ஏற்காமல், தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

Read Next

ஜோசியம் குறித்து உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் காட்டமான பதில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular