துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை “யூத விரோத சர்வாதிகாரி” என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள ஒரே உண்மையான ஜனநாயக நாடான இஸ்ரேலின் தலைவர்களை அச்சுறுத்த எர்டோகன் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்ததாக வெளியான தகவல்களின் பின்னணியில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதனால் இஸ்ரேல் – துருக்கி இடையேயான அரசியல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




