தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே அடிக்கடி பதிலளித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாதி நேரம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே பேசுவதால், விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் திசைமாறுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இதனால் சட்டப்பேரவையில் முக்கிய விவாதங்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயல்பாடுகள் தொடர்பாக பிரேமலதா முன்வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




