கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த 39 வயதுடைய பெண், அவரை கொடூரமாக தாக்கிய வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
விசாரணையில், தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வதற்காக தனது பற்களைக் கூட கூர்மையாக்கியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவர் மீது எழுந்த சந்தேகத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர் வேறு எந்த பெண்ணுடனும் தொடர்பில் இல்லாதது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த கணவர் தற்போது தனது 7 வயது குழந்தையை தனியாக வளர்த்து வருகிறார். இந்த வழக்கில் நீதிமன்றம் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.




