மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இன்று (ஜூலை 20) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் கிருஷ்ணா நகர், வெற்றி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். கோவையில் பட்டணம், அன்னூர், வால்பாறை, சோலையார்நகர், முடிஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை அமலாகும்.
மேலும், திருப்பூரில் ராயன் நகர், காங்கேயம் சாலை, அரச்சலூர், நாதக்கடையூர், திண்டுக்கல்லில் மஞ்சளாறு அணை பகுதி, பெரம்பலூரில் தேரணி, இரூர், ஆவின் பீடர் உள்ளிட்ட பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.




