ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லுபோவ், டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றில் முக மசாஜ் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், சலூனில் முக மசாஜ் செய்து கொண்ட அவர், வெறும் 1 அமெரிக்க டாலர் (சுமார் ₹96) மட்டுமே செலவானதாகவும், அந்த அனுபவம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பல இந்திய நெட்டிசன்கள் அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக கவலை தெரிவித்தனர். பெண்களுக்கான சலூன்களைத் தேர்வு செய்வது பாதுகாப்பானது என்றும், தரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் பலர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த லுபோவ், சலூன் ஊழியர்களின் நடத்தை நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்ததாகவும், தனக்கு எந்தவித அச்சமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், புதிய கலாச்சாரங்களை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.




