‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரை தேர்வு செய்தது நான்தான்.. ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பரபரப்பு தகவல்!

 

தனியார் தொலைக்காட்சியின் இலட்சினை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பண்டிட், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை தாம்தான் தேர்வு செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

எண் கணித அடிப்படையில் 22 என்ற எண்ணுடன் தொடர்புடைய ‘வெற்றி’ என்ற பெயரை தேர்வு செய்ததாகவும், அந்த பெயர் கட்சித் தலைவரான விஜய்க்கு சாதகமாக இருக்கும் எனக் கருதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விஜய்க்கு பொருத்தமான நிறங்களை கருத்தில் கொண்டே தொலைக்காட்சியின் இலட்சினையும் வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“நான் தேர்வு செய்த பெயரில் கட்சி தொடங்கி, இன்று விஜய் முதலமைச்சராகியுள்ளார்” என்ற அவரது பேச்சு நிகழ்ச்சியில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

சட்டப்பேரவையில் மின் கட்டணம் குறித்து செந்தில்பாலாஜி புகார்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Read Next

த்ரிஷாவுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்பா? நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதிய தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular