நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு அழைத்து வந்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தவெக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆட்சி அமைந்தது முதலே முதல்வர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, த்ரிஷா கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, அவரை நேரடியாக எம்.பி.யாக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




