திருமணம் ஆன ஒரு பெண் வேறு ஆணுடன் பழகுவதர்த்கு காரணம் பணத்துகாகவா? இல்ல உடல் சுகத்திர்கவா?
பலருக்கு, நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டது போல, ஏதோ ஒரு் காரணம் இருக்கலாம்…
ஆனால் சிலருக்கு…
இரண்டும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து…
கொஞ்சம் காதல்…
கொஞ்சம் அன்பு…
கொஞ்சம் சிரிப்பு…
கொஞ்சம் பரிவு…
கொஞ்சம் அக்கரை…
கொஞ்சம் ஆறுதல்…
இவை நோக்கியும் இருக்கலாம்.
உணர்வுகளுக்கு செவிகொடுங்கள்..!! ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் பொதுவானது..!! படித்ததில் பிடித்தது..!!
அவளுக்கான சுயமரியாதை,யோ, ஆறுதலோ, அன்போ, பாசமோ, அரவணைப்போ எதுவும் கிடைக்காவிட்டாலும், அவளுக்கு திருமணம் முடிந்த ஒரே காரணத்தால், அனைத்தையும் அனுசரித்துப்போகவேண்டும் என்பதே சொல்லித்தரப்படுகிறது.
எதுவும் அவளுக்கு கிடைக்காதபோது அதை சில பெண்கள் ரகசியமாக மீறுவது தான் திருமண மீறிய உறவு என்றாகிறது…
எல்லோருடைய வாழ்வும் விரும்பியபடி அமைந்துவிடுவதில்லை… வெறுமையும், தனிமையும் ஆட்டிபடைக்கிறது. விதியே என்று வாழ்பவர்கள் உண்டு,
சிலர் விதிவிலக்காய் வாழ்பவர்களும் உண்டு. (சில) திருமணமான ஆணும் பெண்ணும் பழகுவது காமத்திற்கு மட்டும் அல்ல… என் கருத்து…
(பலருக்கு பல கருத்து இருப்பது போல, இது என் கருத்து தானே தவிர, ஆதரிப்பவன் அல்ல… பெண்ணின் நிலையில் நின்று பார்க்கிறேன்)..




