Oplus_131072
திருமண சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்…
திருமணம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் திருமணத்தில் செய்யப்படும் சடங்குகளும் இன்றியமையாதது ஆகும். திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு.
திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை ‘மாங்கல்ய தாரணம்’ எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் ‘சுமங்கலி’ அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்.
திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது, திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவும், அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும், என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் என்பதாகும்.
இதுபோல் திருமணத்தின்போது பல சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவற்றில் சில, வாழைமரம் கட்டுதல், பந்தகால் நடுவது, நலுங்கு வைத்தல், பொன்னுருக்கு தல்தாரை வார்த்தல், தாலி கட்டுவது, ஹோமம் வளர்த்தல், கும்பம் வைத்தல், அம்மி மதித்தல், அருந்ததி பார்த்தல், மறுவீடு அழைத்தல், கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல் என ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னும் ஏதாவதொரு காரணம் ஒளிந்துள்ளது.
பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் வரை!
ஒரு குடும்பத்தில் திருமணத்திற்கு முன்பு உள்ள சம்பரதாயங்களான பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் வரை நல்ல நாட்களில் நடைபெறுவது என்பது சாஸ்திர சம்பரதாயங்களில் சொல்லப்பட்ட ஒரு பழமையான தகவல்கள் ஆகும்.
திருமணப் பொருத்தம் :
திருமணம் செய்வதற்கு பெண் மற்றும் ஆண் இருபாலருக்கும் வயது மட்டுமில்லாமல், திருமணத்திற்கு உண்டான மன வளர்ச்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருவீட்டார் பெற்றோர்களின் மனம் தெளிவாகவும், சுற்றுச்சூழல் அமைதியாகவும் இருக்கும் ஒரு நாளில் ஜோதிடரை பார்த்து திருமணம் செய்யவுள்ள இருவரின் ஜாதக பொருத்தம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண் பார்க்கும் படலம் :
மணமக்களின் தாரபலம், திருமணம் போன்ற சுபகாரியத்துக்குரிய நட்சத்திரங்கள் உள்ள நாளில் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை தவிர்த்து நல்ல நேரங்களில் பெண் பார்க்க செல்ல வேண்டும்.
நிச்சயதார்த்தம் :
நிச்சயதார்த்தம் செய்யும் நாளானது துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், கேந்திர கோணங்களில் பாவக் கிரகங்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.
திருமாங்கல்யம் செய்ய ஏற்ற நாள் :
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் துவிதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் உள்ள நாட்கள் ஏற்றவை.
பந்தக்கால் நடுவதற்கு ஏற்ற நாள் :
துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திங்கள், ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் உள்ள நாட்கள் ஏற்றவை. 1,4,7,10 ஆம் இடங்களான கேந்திர கோணங்களில் பாவக் கிரகங்கள் இல்லாத சுப லக்னத்தை தேர்ந்தெடுத்து செய்தல் வேண்டும்.
திருமணம் :
அஸ்வினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம், ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய லக்னங்கள் ஏற்றவை.




