இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு கசப்பு, உவர்ப்பு என்று அருவகை சுவையாம் நாவிற்கு….
ஆனாலும்
அதே மாதிரி
நாக்குக்கு
வெளியே போகும்
வாக்குகள்
வார்த்தைகள்
அவற்றுக்கும்
பல சுவைகள் உண்டு
சில இனிக்கும்
சில கசக்கும்
சில புளிக்கும்
இனிப்பு, புளிப்பு,கார்ப்பு,
இச்சுவை எல்லாம் பட்டி டிங்கரிங் பண்ணி தனித்து நேரடியா சாப்பிடலாம், அதிகமாக சாப்பிட்டால் நலத்திற்கு கேடு.. சிலரின் சொல் இது போல்..
வேண்டாம் கசப்பு, துவர்ப்பு என ஒதுக்கிடும் சுவை நன்மை பயக்குமாம்,
கசப்பென்றாலும் நன்மை தரும் உண்மை பேசிடுவோம்…
தெப்பமேன கருதி கரையேற நின் சொல்லை பற்றுபவன்
மீண்டும் ஆழமான இடத்தினில்
கொண்டு சேர்த்திடுமே
நின் சொல் எனும் வாக்கு…
காப்பாற்றி கரை செர்பிப்பேன் பொய்யான சொல்லை விட,
நீயே நீந்தி வா
நம்பிக்கை விதைத்து
செல்வது தான் உத்தமம்..!
நீரினில் அடித்து சென்றாலும் எவ்வித கவலையின்றி தன்னால் முடிந்த பலனை அளித்து செல்லும் உரமென உன் சொல்லை விதைத்து விட்டு செல்…
விதைக்கும் சொல் பூவாகி காயாகி கனியாகி தந்திடும் சொல்லாக பராமரி..
தூக்கி ஏறியப்படும் களை செடியென எவர் மனதிலும் இருக்காதீர்..
வார்த்தைகள் நெருக்கம் காட்டாதீர், செயலில் காட்டுங்கள்,
சொல்லை காப்பாற்றுங்கள்..
குப்பையென நின் நினைவுகள்
அகற்றுவதும்
பொக்கிஷமாய் நின் சொல்
மனதில்…
நினைவுகளாய் தங்கும்
தடயமாக இருப்பது
உந்தன் சொல்லினில்.
செயலினில்…




