நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் இழந்ததால் மனமுடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.




