பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அறிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகிக்கு, திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி 2022ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.




