தமிழ்நாடு அரசு, “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பராமரிப்புப் பொருட்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த விலையை கோரிய ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பணி ஆணை வழங்கியுள்ளது.
இதில் ஆச்சரியமளிக்கும் வகையில், ஒரு மோதிரத்திற்கான செய்கூலி, சேதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து ஒரு பைசா மட்டுமே கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டம், தமிழகத்தில் கவனம் பெற்றுள்ளது.




