புத்துணர்வு பெற கண்டிப்பா இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுங்கள்..!!

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு அவுன்ஸ் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர கபத்தன்மை சீராகி உடல் சோர்வின்றி இருக்கும். ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு மிகவும் இது நல்லது.

முருங்கைக்கீரை சூப் குடிப்பதாலும் புத்துணர்வு பெற முடியும். இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கைக்கீரை சூப் செய்து குடித்து வர ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக் கொள்ளலாம். அருகம்புல் சாறு சுத்தம் செய்த அருகம்புல்லை ஒரு டம்ளர் நீரை சேர்த்து பிழிந்து எடுத்து சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது. உடல் வறட்சியை நீக்கக்கூடியது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது .

Read Previous

மகளிர் நிதி உதவி தொகை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கிய அமைச்சர்..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

Read Next

TNPSC வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு..!! 70 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular