தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், போட்டித்தேர்வுகளின் மூலம் அரசு பணிக்காக காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது Group-I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Assistant Director of Rural Development, Assistant Director of Rural Development, மற்றும் District Employment Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC காலிப்பணியிடங்கள்:
Group-I பணிக்கென 70 காலிப்பணியிடங்கள்.
Deputy Collector – 28 பணியிடங்கள்
Deputy Superintendent of Police – 7 பணியிடங்கள்
Assistant Commissioner – 19 பணியிடங்கள்
Assistant Director of Rural Development – 7 பணியிடங்கள்
District Employment Officer – 3 பணியிடங்கள்
Assistant Commissioner of Labour – 6 பணியிடங்கள்
TNPSC கல்வி தகுதி:
டிகிரி தேர்ச்சி.
TNPSC வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 21.
TNPSC ஊதிய விவரம்:
TNPSC -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் Counselling மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




