பொங்கல் பண்டிகை ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,800 வரை வசூலிக்கப்படுகிறது. இதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,800 முதல் ரூ.4,000 வரையும், திருநெல்வேலிக்கு ரூ.2,800 முதல் ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.




