மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு அப்பாவின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

 

மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு அப்பாவின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை…!!!*_

 

_*தன் மகனை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவன் அப்பாவிடம் கேட்டான்… ஏன் அப்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று…*_

 

_*ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவனுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்…*_

 

_*ஒரு நாள் மகன் தன் அப்பாவிடம் வந்து கேட்டான்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான்.*_

 

_*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தான்… அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்று மகனிடம் கேட்டார் அப்பா

 

_மகன் பட்டென பதில் சொன்னான் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னான்…*_

 

_*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…*_

 

_*அப்பா சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது…*_

 

_*இதேபோலத்தான் உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…*_

 

_*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகன் தனஅப்பா சொன்ன கருத்தை கேட்டு தன் அப்பாவின் கைகளை பிடித்தக் கொண்டான்..!!!*_

 

_ உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…*_

 

_*எனவே அப்பாவின் சொல் கேட்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!*_

 

_*அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகனின் வாழ்கை இனிமையாக அமையும்…!!

 

அப்பா என்றும் இனிமை ஆனவரே ஆனால் உன் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்

 

மற்றவர்கள் உன்னிடம் பாசமா நடக்கறமாதிரி நடிப்பாங்க உன் வளர்ச்சிப் பற்றி மகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள் நீ எப்போ வீழ்வாய் என்று நினைப்பார்கள்

 

அப்பா மகன் உறவு எப்படி என்று உனக்கு இப்போ தெரியாது

 

நீ திருமணமாகி ஒரு மகனைப் பெற்று வளர்க்கும் போது தெரியும்

 

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று அப்போ புரியும்..

Read Previous

கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Read Next

மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்..!! ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular