Oplus_131072
தேவையான பொருட்கள்
மட்டன் (எலும்பு இல்லாதது) – 250 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டர் – அரை தேக்கரண்டி
பட்டை – ஒன்று சிறியது
வெங்காயம் – 2
தந்தூரி மசாலா – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகதூள் – கால் தேக்கரண்டி
தக்காளி – 2
தயிர் – ஒரு மேசைக்கரண்டி
கொத்துமல்லி இலை – 2 மேசைக் கரண்டி
பச்சைமிளகாய் – 2
மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
பட்டை – சிறிதளவு
செய்முறை
கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
குக்கரில் எண்ணையை காய வைத்து பட்டையைப் போட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு கறி, புதினா, கொத்துமல்லி இலையை பொடியாக அரிந்து போட வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கிப் போட்டு தீயை சிம்மில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.
பின்பு எல்லா தூள் வகைகளையும் போட்டு கிளறி தயிரையும் சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் முன்று, நான்கு விசில் விட வேண்டும்.
ஆவி அடங்கியதும் தீயை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றி கூட்டும், கறியுமாய் இருக்கும் போது இறக்க வேண்டும்.




