தமிழக சட்டப்பேரவையில் மின்துறை தொடர்பான விவாதத்தின்போது, கடந்த 5 ஆண்டுகளில் மின்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மேலும், 2021 முதல் 2026 வரை மின்துறையில் வெறும் 343 பேர் மட்டுமே புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆட்சிக் காலத்தில் மின்துறைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என விமர்சித்தார்.




