விழுப்புரம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 26 வயது சரக்கு வாகன ஓட்டுநர் அந்தோணி ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், அந்தோணி ராஜ் மீது ஏற்கனவே 2023ஆம் ஆண்டிலும் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




