தமிழக முன்னாள் கால்பந்து வீரருக்கு அர்ஜுனா விருது!

 

 

இந்திய கால்பந்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ. அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

 

கடந்த 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ஐ. அருமைநாயகம். பல ஆண்டுகளாக இந்திய கால்பந்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

முதல்வரை சந்தித்த திருமாவளவன்.. தவெக கூட்டணி குறித்து முக்கிய கருத்து!

Read Next

அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular