ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுக்க எடை தராசுகளை பி.ஓ.எஸ். கருவியுடன் இணைப்பதில் மென்பொருள் மாற்றங்கள் அவசியம் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனங்களின் விவரங்களை மண்டல இணைப் பதிவாளர்கள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




