பீஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், அதிநவீன ஹூமனாய்டு ரோபோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
நேரலை செயல்விளக்கத்தின் போது ரிமோட் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரோபோ மல்லாந்து விழுந்து கை, கால்களை வேகமாகவும் கட்டுப்பாடின்றியும் அசைக்கத் தொடங்கியது. அதன் அசைவுகள் பார்ப்பதற்கு மனிதருக்கு வலிப்பு ஏற்பட்டதைப் போல இருந்ததால், அங்கிருந்தவர்கள் குழப்பமடைந்தனர்.
உடனடியாக பொறியாளர்கள் விரைந்து வந்து ரோபோவை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அதை அணைத்து நிலைநிறுத்துவதற்கு சில நேரம் போராட வேண்டியிருந்தது.
நவீன ரோபோ தொழில்நுட்பத்தின் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியிலேயே ஏற்பட்ட இந்த எதிர்பாராத கோளாறு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram




