தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதுவரை 23.56 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.28,687 கோடியும், மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த அவர், 87 கூட்டு குடிநீர் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுளதாக அறிவித்துள்ளார்.




