24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையில் ₹1 உயர்வும், ஊக்கத்தொகையாக ₹2-ம் சேர்த்து மொத்தம் ₹3 கூடுதலாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் பால் கொள்முதல் விலை ₹44 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது கொள்முதல் விலை ₹1 மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் அதிக விலை வழங்குவதாகவும், ஆவினுக்கு தொடர்ந்து பால் வழங்கி வரும் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் கொள்முதல் விலையை குறைந்தபட்சம் ₹50 வரை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தப் போவதாகவும் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவனங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு: கணவரை கொன்ற மனைவி கைது!

Read Next

இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி: இந்த நன்மைகள் கிடைக்குமாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular