410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

 

 

2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், அரசின் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை பணி கிடைக்காமல் உள்ள 410 பேருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

உச்ச நீதிமன்றமே லோக் அதாலத் மூலம் இந்த விவகாரத்தை கருணை அடிப்படையில் தீர்க்குமாறு அறிவுறுத்திய பிறகும், தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்ய முயல்வது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

மேலும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, விடுபட்ட 410 பேருக்கும் தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Read Previous

அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?..

Read Next

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 அப்ரண்டீஸ் பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular