டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது, “ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம். இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன்” என்றார்.




