அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம்..!!

 

 

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம்-க்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனன் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

 

சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு சென்ற அவர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அங்கு இல்லாததால், அலுவலகத்தில் ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

 

முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நினைவிடத்தில் ராஜினாமா கடிதங்களை வைத்து மரியாதை செலுத்திய பின்னரே அவர்கள் கட்சி அலுவலகத்திற்குச் சென்றனர்.

 

இந்தச் சம்பவம் அதிமுகவின் உள்கட்சி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மாநிலங்களவை எம்.பி.க்களுக்காக 2 ஆண்டுகளில் ரூ.261 கோடிக்கு மேல் செலவு: RTI தகவல்..!!

Read Next

காலையில் வயிற்று உப்புசம், வாயுத் தொல்லையா?.. எளிய தீர்வுகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular