நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் CJP போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீச்சு, இணைய சேவை முடக்கம் மற்றும் மெட்ரோ நிலையங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்காக போராடும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைக் குரல் வெல்ல வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகக் கூறப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “நீதிக்காக குரல் எழுப்புபவர்களை எந்தவித அடக்குமுறையாலும் நிரந்தரமாக ஒடுக்க முடியாது” என்றும் திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.




