சென்னை பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் வீட்டிற்கு அருகிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரிசீலனையில் உள்ள 17 ஏக்கர் நிலம், முதலமைச்சரின் இல்லத்திற்கு மிக அருகில் இருப்பதுடன், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால், இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் அதிகாரிகள் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடத்தின் தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




