ஓமம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?.. மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்..!!

ஓமம் வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்வதுடன், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் உள்ள தைமால் போன்ற சக்திவாய்ந்த கலவைகள், வயிற்றுப் போக்கை சீராக்குவதுடன், சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன. மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், பசியை தூண்டவும் ஓமம் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கவும் ஓமம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அன்றாட உணவில் அளவோடு ஓமத்தை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சியா விதைகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?.. எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்..!!

Read Next

வாட்ஸ்அப்பை விட டெலிகிராமில் இத்தனை வசதிகளா?.. அசத்தும் சிறப்பம்சங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular