கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் மீது கல்வீச்சு: ஓட்டுநர் காயம்!

 

 

கோவை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் ரயில் மீது கற்களை வீசியதாக தெரிகிறது.

 

இந்த தாக்குதலில் ரயில் என்ஜினின் முன்பக்க கண்ணாடி உடைந்து, அதன் கண்ணாடித் துண்டுகள் ஓட்டுநர் டென்னி தாமஸ் கை மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

 

சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

விஜய்க்கு பாராட்டு: இந்திய பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ரவி மரியா!

Read Next

கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்பு: திமுக கூட்டணி குறித்து விசிக கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular