ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களின் 31-வது முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை கோவளத்தில் வரும் 19, 20-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கோவளம் தாஜ் பிஷ்சர்மேன்ஸ் கோவ் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த மாநாட்டில் 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தென்மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டின் 30-வது கூட்டம் கேரளாவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது 31-வது மாநாடு தமிழகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.




