விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கு ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமானால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு, ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை பின்பற்றத் தவறினாலும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவசர அழைப்புகளை புறக்கணிக்கும் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் தொடர்பாக உடனடி உதவிக்கு ‘1033’ என்ற உதவி மைய எண்ணை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




