கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

 

கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் 54 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. விதிமீறல் நியமனங்கள் குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் சென்றது.

இந்நிலையில், விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறப்படும் 54 இளநிலை உதவியாளர்களையும் பணியில் இருந்து நீக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து, 54 பேரையும் உடனடியாக பணிநீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை கோவை மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

தமிழ் வழியில் படித்து மணிப்பூரின் இளம் மாவட்ட ஆட்சியரான தஞ்சை பெண்!

Read Next

இலங்கை – இந்தியா முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular