ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவுக்காக இரும்பு கொடிக்கம்பம் நடும் பணியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
இரும்பு கொடிக்கம்பம் அருகில் இருந்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியர் பிரியபிரெடா பிஹிரா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு உதவியாக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்களும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின்றி மின்கம்பிகளுக்கு அருகில் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.




