அரசுப் பள்ளியில் படித்து NEET-ல் சாதனை! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடம்!

 

 

நெல்லை வெள்ளாங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் 3 மகன்களான வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்து NEET தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

 

7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும், வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களும் மருத்துவத் துறையில் கால்பதிக்க உள்ள நிலையில், அவர்களுக்கு குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

விவசாயிகளுக்கு ரூ.2,000: PM-Kisan 24வது தவணை எப்போது?

Read Next

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular